மலேசியாவில் ‘தளபதி திருவிழா’; ஜனநாயகன் இசை வெளியீடு

கோலாலம்பூர்:

கோலாலம்பூரில் உள்ள புகிட் ஜாலில் (Bukit Jalil) தேசிய மைதானத்தில் நடைபெற்ற இந்த விழா, வெறும் இசை வெளியீடாக மட்டுமன்றி ‘தளபதி திருவிழா’ என்ற பெயரில் ஒரு மாபெரும் இசை கச்சேரியாகவே கொண்டாடப்பட்டது.

இந்த மைதானம் சுமார் 85,000 பேர் அமரும் வசதி கொண்டது. இதில் 75,000-க்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டது, ஒரு தமிழ்ப் பட விழாவிற்கு வெளிநாட்டில் கூடிய மிகப்பெரிய கூட்டமாகக் கருதப்படுகிறது. இதனால் இது Malaysia Book of Records-ல் இடம்பிடித்துள்ளது.

அனிருத் மற்றும் சுமார் 30 பாடகர்கள் இணைந்து விஜய்யின் பழைய ஹிட் பாடல்களைப் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

மேலும் இயக்குனர் எச். வினோத் மட்டுமன்றி, விஜய்யுடன் பணியாற்றிய லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லீ மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவா ஆகியோர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ள விஜய்யின் 69-வது மற்றும் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ சுமார் ₹300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here