கூட்டணித் தலைவர் பதவியில் இருந்து முஹிடின் யாசின் விலக முடிவு செய்ததைத் தொடர்ந்து, பெரிகாத்தான் நேஷனலின் பொறுப்பை பாஸ் கட்சி ஏற்கும் என்பதைத் தலைவர் அப்துல் ஹாடி அவாங் உறுதிப்படுத்தினார். முஹிடின் வகித்து வந்த பதவிக் குறித்து விவாதிக்க அடுத்த வாரம் ஒரு கூட்டம் நடைபெறும் என்று ஹாடி கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
கட்சியில் உள்ள மத அறிஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களில் பாஸ் கட்சிக்கு பல வேட்பாளர்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். இருப்பினும், குறிப்பாக யாரையும் அடையாளம் காண ஹாடி மறுத்துவிட்டார்.





















