டுங்குனில் நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டாவது நபரின் உடல் மீட்பு

டுங்குன் பந்தாய் சூரா தெங்காவில் நீரில் மூழ்கி இறந்த இரண்டாவது நபரான முகமது ஃபசீர் ஷஃபி (37) என்பவரின் உடல் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டது. டுங்குன் காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் மைசுரா அப்துல் காதிர் கூறுகையில், மீட்புப் பணியாளர்கள் அவரது உடலை நள்ளிரவு 12.35 மணிக்கு, அவர் கடைசியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கண்டுபிடித்ததாகக் கூறினார்.

அவரது உடல் கோல திரெங்கானுவில் உள்ள சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார். முகமது ஃபசீர் தனது சகோதரி 39 வயதான நோர் பைசுராவை நீரில் மூழ்கவிடாமல் காப்பாற்ற முயன்றபோது இருவரும் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவம் நேற்று காலை 10:27 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்தது.

நோர் பைசுராவின் உடல் நேற்று காலை 10.54 மணிக்கு மீட்கப்பட்டது. சகோதரர்கள் விடுமுறைக்காக தங்கள் கிராமத்திற்குத் திரும்பி 13 குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். நோர் பைசுரா, ஒரு இல்லத்தரசி ஆவார்.  அதே சமயம் முகமது ஃபசீர் குவாந்தனில் லாரி டிரைவராக பணிபுரிந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here