கோலாலம்பூர்:
எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) டத்தோ முகமது ஷாமிர் அப்துல் அஜிஸ் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முதல் அமலுக்கு வரும் இந்த நியமனத்திற்கான கடிதத்தை, புத்ராஜெயாவில் உள்ள மனிதவள அமைச்சில் வைத்து அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அவரிடம் வழங்கினார்.
கடந்த 2025 ஜூலை முதல் இந்தப் பதவியில் இருந்த டாக்டர் சையத் அல்வி முகமது சுல்தான் பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்பை டத்தோ முகமது ஷாமிர் ஏற்றுக்கொள்கிறார்.

























