இங்கிலாந்தை உலுக்கும் ‘சந்திரா’ புயல்.. 10 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின

லண்டன்,இங்கிலாந்தில் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே அடுத்தடுத்து புயல்கள் தாக்கி வருகின்றன. ‘கோரெட்டி’ மற்றும் ‘இங்க்ரிட்’ ஆகிய இரண்டு பெரிய புயல்கள் ஏற்கனவே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில், புதிதாக ஒரு புயல் உருவாகியுள்ளது.

இந்த புயலுக்கு இங்கிலாந்து வானிலை ஆராய்ச்சியாளர்கள் ‘சந்திரா’ என பெயர் வைத்துள்ளனர். மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பல மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

மேலும், பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை ரப்பர் படகுகள் மூலமாக மீட்கும் பணியில் அந்த நாட்டின் பேரிடர் மீட்புத்துறையினர் ஈடுபடுகிறார்கள். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. எனினும் விமானம் மற்றும் ரெயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here