ஓடிடியில் வெளியாகும் “தி ராஜா சாப்” படம்.. எதில், எப்போது பார்க்கலாம்?

பான் இந்தியா நட்சத்திரம் பிரபாஸ் நடிப்பில் கடந்த 9ந் தேதி வெளியான படம் ‘தி ராஜா சாப்’. பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிப்பில் மாருதி இயக்கிய இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாகவும், சஞ்சய் தத், போமன் இரானி, ஜரினா வஹாப் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர், ராஜா சாப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளில் 1சதவீதம் பூர்த்தி செய்யத் தவறினாலும் கேள்வி கேட்கலாம் என்று சவால் விட்டிருந்தார். பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இப்படம் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘தி ராஜா சாப்’ படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி, ஜியோ ஹாட்ஸ்டாரில் வரும் பிப்ரவரி 6ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்டிரீமிங் ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here