KLIA2-இல் மான் கொம்புகளைக் கடத்த முயன்ற பிரான்ஸ் நாட்டவர் கைது!

சிப்பாங், பிப்ரவரி 2:

மலேசியாவிலிருந்து வியட்நாமின் ஹனோய் நகருக்குச் செல்லவிருந்த பிரான்ஸ் நாட்டுப் பயணி ஒருவரின் உடைமைகளைச் சோதனையிட்டபோது, அவற்றுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மான் பாகங்களை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை (MCBA) அதிகாரிகள் நேற்று நண்பகல் வேளையில் இந்தப் பறிமுதலைச் செய்தனர்.

இரண்டு மான் கொம்புகள் மற்றும் ஒரு மானின் மண்டை ஓடு ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் RM3,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு அந்த நபரிடம் முறையான அனுமதிப் பத்திரங்களோ அல்லது ஆவணங்களோ இல்லை.

கைது செய்யப்பட்ட அந்த நபர் மேலதிக விசாரணைக்காக ஏரோபோலிஸ் (Aeropolis) போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்த வழக்கு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், அழிந்து வரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகச் சட்டம் (CITES) ஆகிய சட்டங்களின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட மான் பாகங்கள் மேலதிக நடவடிக்கைக்காக வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையிடம் (Perhilitan) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here