தேசிய உயர்கல்வி நிதி வாரியம் (PTPTN), ஜனவரி 29 ஆம் நாள் 2025 Simpan SSPN குலுக்கலை நடத்தியது. கோலாலம்பூர், ஹோட்டல் ராயல் சூலனில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை PTPTN தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிஷா அப்துல் ரஹிம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இதில் PTPTN உயர் நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.
உயர் கல்வி அமைச்சின் (KPT) கீழ் இயங்கும் ஒரு முகமையாக, PTPTN கடந்த 2004-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Simpan SSPN மூலம் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது.
மலேசிய மக்களிடையே நிதி நிர்வாகத்தை மேம்படுத்துவதே PTPTN-இன் முக்கிய நோக்கமாகும். மேலும், குழந்தைகளின் கல்விக்காக Simpan SSPN-ஐ தேர்ந்தெடுத்த வைப்புத் தொகையை செலுத்தியவர்களுக்கு (depositors) நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இக்குலுக்கல் நடத்தப்படுகிறது என்று டத்தோஸ்ரீ நோர்லிஷா அப்துல் ரஹிம் தெரிவித்தார்.
இக்குலுக்கல் மூலம் 954 அதிர்ஷ்டசாலிகளுக்கு கிட்டத்தட்ட RM1.4 மில்லியன் மதிப்பிலான பிரமாண்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன. இப்போட்டி 2026 ஜனவரி 1 முதல் தொடங்குகிறது.
இதில் மூன்று வகையான குலுக்கல்கள் இடம்பெறுகின்றன: WOW! Plus Loyalty 2026 (வருடாந்திரப் பிரிவு), WOW! Plus Siri, Simpan SSPN Baru Slay!.

WOW! Plus Loyalty 2026 குலுக்கல் பிரதான பரிசுடன் டத்தோஸ்ரீ நோர்லிஷா (வலம்), புவான் மஸ்துரரா (இடம்).
WOW! Plus Loyalty 2026 வருடாந்திர குலுக்கலில் முதல் பரிசாக Honda CR&V 1.5L E கார் வழங்கப்படுகிறது. இரண்டாம் பரிசாக இருவருக்கு Perodua Ativa 1.0L Turbo AV காரும், மூன்றாம் பரிசாக மூவருக்கு தலா RM30,000 ரொக்கப்பணமும் வழங்கப்படவுள்ளன. ஆறுதல் பரிசாக 250 பேருக்கு தலா RM1,000 ரொக்கம் கிடைக்கும்.
WOW! Plus Siri பிரிவில், ஒவ்வொரு தொடருக்கும் முதல் பரிசாக RM20,000 ரொக்கப்பணம் ஒருவருக்கு வழங்கப்படும். இரண்டாம் பரிசு இருவருக்கு தலா RM15,000, மூன்றாம் பரிசு மூவருக்கு தலா RM10,000 மேலும் 50 பேருக்கு தலா RM500 ஆறுதல் பரிசாக வழங்கப்படும்.
இளைஞர்களுக்கான Simpan SSPN Baru Slay! பிரிவில், முதல் பரிசாக Yamaha NVX 155 மோட்டார் சைக்கிள் வழங்கப்படுகிறது. இரண்டாம் பரிசாக நால்வருக்கு iPhone 17 Pro கைப்பேசியும் மூன்றாம் பரிசாக 10 பேருக்கு DJI Osmo Pocket 3 Creator Combo கேமராவும் வழங்கப்படும். மேலும் 250 பேருக்கு தலா RM500 ஆறுதல் பரிசு உண்டு.
கணக்கைத் தொடங்க வேண்டும் அல்லது சேமிப்பை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு RM50 நிகர சேமிப்பிற்கும் (தக்காஃபுல் உட்பட) தானாகவே 5 குலுக்கல் வாய்ப்புகள் வழங்கப்படும். myPTPTN செயலி, சம்பளப் பிடித்தம் அல்லது ‘Direct Debit’ மூலம் சேமிப்பவர்களுக்கு 10 மடங்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும்.
PTPTN தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிஷா கூறுகையில், முதல் முறையாக இளைஞர்களைக் கவரும் வகையில் Simpan SSPN Baru Slay! அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 16 முதல் 29 வயதுக்குட்பட்ட Simpan SSPN Prime மேலும் Plus சேமிப்பாளர்களுக்கானது. இவர்கள் myPTPTN செயலி மூலம் சேமிப்பை மேற்கொள்வது அவசியமாகும் என்றார்.
சேமிப்பதோடு மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் நடைபெறும் இக்குலுக்கலில் பங்கேற்க மக்களை அழைக்கிறேன். இத்திட்டம் மலேசியாவின் முக்கிய கல்விச் சேமிப்புத் திட்டமாக Simpan SSPN-ஐ வலுப்படுத்துவதோடு, மலேசியா MADANI விருப்பங்களுக்கு ஏற்ப ஓர் அறிவுசார்ந்த தலைமுறையை உருவாக்கும் என நம்புகிறேன் என்று அவர் மேலும் கூறினார்.
2025 குலுக்கலில் வெற்றி பெற்றவர்கள்
இதே நிகழ்ச்சியில் 2025ஆம் ஆண்டு குலுக்கல் வெற்றியாளர்களும் கௌரவிக்கப்பட்டனர். மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz A250), ஹொண்டா சிவிக் (Honda Civic) போன்ற சொகுசு கார்களை வெற்றியாளர்கள் வென்றனர்.
பிளேட்டினம் பிரிவில் பிரதான பரிசு
மெர்சிடிஸ்-பென்ஸ் அ250 4 Matic AMG Line காரை பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த உமி கல்சோம் பிந்தி அப்துல் ரசாக் வென்றார்.
இரண்டாம் பரிசு
ஹொண்டா HRV 1.5L TV காரை நெகிறி செம்பிலான், போர்ட்டிக்சனைச் சேர்ந்த முஹம்மட் ஃபிர்டாவ்ஸ் பின் ஹாஜி நவாமி தட்டிச் சென்றார்.
மூன்றாவது பரிசு ரொக்கம் RM15,000-ஐ கிளாந்தானை சேர்ந்த ரோஷ்ஃப்ரினா பிந்தி செப்பி வென்றார்.

WOW! Simpan SSPN 2025 குலுக்கலில் பிரதான மேலும் இரண்டாவது வெற்றியாளர்களுடன் டத்தோஸ்ரீ நோர்லிஷா அப்துல் ரஹிம் (நடுவில்)
SUPERHEROES பிரிவு
பிரதான பரிசான RM30,000 ரிங்கிட் ரொக்கத்தை நெகிறி செம்பிலான், சிரம்பானைச் சேர்ந்த சுஹாய்டா பிந்தி ராஸி தட்டிச் சென்றார்.
இரண்டாவது பரிசு தலா RM15,000 ரொக்கத்தை சிலாங்கூர், காஜாங்கைச் சேர்ந்த நூர்ஃபராடியானா பிந்தி முகமட் ஸம் ஸம், சிலாங்கூர், செமினியைச் சேர்ந்த முஹம்மட் ரஸிஃப் ஓஸ்மான், பகாங்கைச் சேர்ந்த நோராசெயன் பிந்தி அமாட் ஆகியோர் வென்றனர்.
வெற்றிபெற்ற அனைவரும் டத்தோஸ்ரீ நோர்லிஷா அப்துல் ரஹிமிடமிருந்து மாதிரி சாவிகளையும் காசோலைகளையும் பெற்றுக்கொண்டனர்.
Simpan SSPN திட்டத்தில் சேமிப்பதன் மூலம் ஆண்டுக்கு RM8,000 வரை வரி விலக்கு, தக்காஃபுல் பாதுகாப்பு, தகுதியுள்ள குடும்பங்களுக்கு RM10,000 வரை ஊக்கத்தொகை (Matching Grant), போட்டித்தன்மை வாய்ந்த லாப விகிதம் மேலும் அரசாங்க உத்தரவாதம் போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றன என்று அவர் சொன்னார்.
பட்ஜெட் 2025-இன் கீழ், RM4,000 முதல் RM6,000 வரை வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ‘இஹ்சான் ஊக்கத்தொகை’ (GAPAI) விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தகுதியுள்ள குடும்பங்கள் ஒரு குடும்பத்திற்கு RM5,000 வரை ஊக்கத்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு, www.ptptn.gov.my என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம் அல்லது myPTPTN செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம்.

“Simpan SSPN PLUS திட்டத்தில் என் பிள்ளைகளின் எதிர்காலக் கல்விக்கு சேமிக்கத் தொடங்கியது என் வாழ்க்கையில் எதிர்பாராத ஓர் அதிர்ஷ்டத்தை தந்திருக்கிறது என்று இதன் தொடர்பான குலுக்கலில் பிரதான பரிசான மெர்சிடிஸ் பென்ஸ் A250 4 MATIC AMG LINE வென்றது மறக்க முடியாத ஓர் இன்ப அதிர்ச்சி, இறைவனுக்கு நன்றி சொல்கிறேன் என்று பெட்டாலிங்ஜெயாவைச் சேர்ந்த உமிகல்சோம் பிந்தி அப்துல் ரசாக் கூறினார். பரிசு கிடைத்திருக்கிறது என்று PTPTN அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. இங்கு பிரதான பரிசுக்கு என் பெயர் அறிவிக்கப்பட்டபோது அப்படியே ஸ்தம்பித்து அழுதேவிட்டேன். இது எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றத்தையும் நம்பிக்கையையும் தந்திருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.
கோல்டு பிரிவு வெற்றியாளர்கள்:
பிரதான பரிசு HONDA CIVIC 1.5L RS காரை பகாங்கைச் சேர்ந்த நோர் ஷஃபிக்கா பிந்தி ஸக்காரியா வென்றார்.
இரண்டாவது பரிசு TOYOTA VIOS 1.5G AT காரை சரவாக், பாவைச் சேர்ந்த எவித்தா ஆங் யென் யென் தட்டிச் சென்றார்.
WOW! Plus Loyalty மேலும் WOW! Plus Siri ஆகியவை Simpan SSPN Plus வைப்புத்தொகை வைத்திருப்போருக்கான பிரத்தியேக திட்டங்களாகும். இதில் Loyalty பிரிவு, 31 டிசம்பர் 2025-க்குள் கணக்கு தொடங்கி தொடர்ந்து சேமிக்கும் விசுவாசமான சேமிப்பாளர் களுக்கானதாகும். Plus Siri பிரிவு புதிய, பழைய சேமிப்பாளர்கள் அனைவருக்கும் பொதுவானது.
இப்போட்டியில் பங்கேற்க, Kempen காலத்தில் புதிய இதன் மூலம் தகுதியுள்ள குடும்பங்கள் ஒரு குடும்பத்திற்கு RM5,000 வரை ஊக்கத்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு, www.ptptn.gov.my என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம் அல்லது myPTPTN செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம்.








