இவ்வாண்டு முதல் காலாண்டில் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுக்கும் வகையில் ஆறு முக்கியத் துறைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தில் தமது அமைச்சு தீவிர கவனம் செலுத்தும் என்று டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ குறிப்பிட்டார்.
சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம், சிறு, நடுத்தர நிறுவனங்களின் டிஜிட்டல் மயமாக்கல், அமலாக்கம், அரசு சேவைகள் ஆகியவையே இந்த ஆறு முக்கியத் துறைகளாகும். இந்த ஆறு துறைகளிலும் உள்ள மக்கள் அதனைப் புரிந்துகொண்டு, அணுகி, ஏற்றுக் கொள்ளும் வகையில் டிஜிட்டல் மயமாக்கல் எவ்வாறு பங்களிக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம். அப்போதுதான் அதன் உண்மையான தாக்கத்தை நாம் உணர முடியும் என்று இன்று மெனாரா 118இல் நடைபெற்ற பிஎன்பி எம்டி நெக்ஸஸ் அறிமுக நிகழ்ச்சியில் உரையாற்றியபோது கோபிந்த் சிங் தெரிவித்தார்.
புதிய தொழில்நுட்பத்தில் உள்ள இடைவெளியைக் குறைக்க அரசாங்கம் உதவ வேண்டும் என்றும் இந்த முயற்சிகள் மக்களுக்கு உண்மையான, உறுதியான தாக்கமாக மாறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னார். நாம் செய்யும் செயல்கள் மக்களுக்கு நன்மைகளை வழங்குவதை உறுதி செய்ய இந்த ஆறு துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
மலேசியா டிஜிட்டல் பொருளாதாரக் கழகம் (MDEC) தலைமையிலான டிஜிட்டல் அமைச்சின் இருப்பிட அங்கீகார முயற்சியின் கீழ், MD NEXUS அங்கீகாரம், டிஜிட்டல் வணிகச் சேவைகள், புதுமைகளை ஆதரிக்க வடிவமைக்கப்பட்ட முதன்மையான, உயர்தர வணிக வளாகமாக அங்கீகரிக்கப்படுகிறது.
மலேசியாவின் முதல் மெர்டெக்கா 118, MD NEXUS சமூக, பொருளாதார கட்டமைப்பின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான எங்களது நோக்கத்தின் உறுதியான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இந்த அறிமுக நிகழ்வு நமது தேசிய டிஜிட்டல் மயமாக்கல் கொள்கை ஆவணங்களிலிருந்து நடைமுறைக்கு நகர்கிறது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும் என்று கோபிந்த் சிங் மேலும் கூறினார்.










