கோலாலம்பூர்:
மலேசியா மற்றும் இந்தோனேசியா இடையிலான எல்லை நிர்ணய விவகாரம் குறித்து இன்று காலை நாடாளுமன்றத்தில் நடைபெறும் சிறப்பு விளக்கக் கூட்டத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிடையே எழுந்துள்ள குழப்பங்கள் மற்றும் தவறான புரிதல்களைக் களைவதற்கும், மலேசியர்கள் அனைவருக்கும் தெளிவுபடுத்துவதற்கும் இந்த விரிவான விளக்கம் உதவும் என்று அவர் கூறினார்.
மலேசியா-இந்தோனேசியா எல்லை சீரமைப்பு விவகாரம் குறித்து இன்று காலை நாடாளுமன்றத்தில் நடைபெறும் சிறப்பு விளக்க அமர்வில் நான் விரிவாக விளக்குவேன்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“இந்த விளக்கம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், குறிப்பாக பொதுமக்களிடையே நிலவும் குழப்பங்களையும் தவறான புரிதல்களையும் சரிசெய்யும் என்றும் நான் நம்புகிறேன்.”




















