பொருட்காட்சியில் சரிந்து விழுந்த ராட்டினம்; இன்ஸ்பெக்டர் பலி

சண்டிகர்,அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் இன்று மாலை பொருட்காட்சி நடைபெற்றது. இதில் அந்த மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பொருட்காட்சியை கண்டு களித்தனர்.

பொருட்காட்சியில் ராட்டினங்கள் உள்ளிட்ட ஏராளமான விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், பொருட்காட்சியில் இடம்பெற்றிருந்த ராட்டினத்தில் மக்கள் ஏறி விளையாடினர். அப்போது, ராட்டினம் சுற்றிக்கொண்டிருந்தபோது திடீரென சரிந்து விழுந்தது.

இதில் அங்கு பாதுகாப்புப்பணியில் நின்றுகொண்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஷ் பிரசாத் மீது ராட்டினம் விழுந்தது. இதில் அவர் படுகாயமடைந்தார். மேலும், ராட்டினத்தில் இருந்த கீழே விழுந்த 13 பேர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஷ் பிரசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here