நம்பிக்கை, நாணயம், நியாயமான விலையில் தரமான தங்க நகைகளை வாங்க வாடிக்கையாளர்கள் நாடும் எஸ்எம்எஸ் டீன் ஜூவல்லரியின் 5ஆவது கிளை இன்று ரவாங்கில் திறப்பு விழா கண்டது.
கோலாலம்பூர், ஜோகூர், பினாங்கு, கிள்ளான் ஆகிய இடங்களைத் தொடர்ந்து தற்பொழுது தங்களுக்கு 5ஆவது கிளை திறப்பு காண்பதில் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாக டீன் ஜூவல்லரியின் உரிமையாளர்களில் ஒருவரான சைஃபூதின் தெரிவித்தார்.
வாடிக்கையாளர் வழங்கி வரும் வற்றாத ஆதரவினால் இந்த 5ஆவது கிளை திறப்பு விழா கண்டிருப்பதாகவும் புதிய கடையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகைகளுக்கு பூஜ்ஜிய விழுக்காடு செய்கூலி என்றும் அவர் கூறினார்.
ரவாங் நேசன் உணவகத்தின் எதிர்புறம் அமைந்துள்ளது. எஸ்எம்எஸ் டீன் ஜூவல்லரியின் 5ஆவது கிளை. வாங்குவதற்கு வாருங்கள்; வற்றாத ஆதரவு தாருங்கள் என்று அவர் வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டார்.












