மைடின் மலேசியா தலைமை நிர்வாகி விஷ்ணுவுக்கு பிஜேகே விருது

மேன்மை தங்கிய யாங் டி பெர்துவான் பெசார் நெகிரி செம்பிலான் துவாங்கு முக்ரிஸ் இப்னி அல்மர்ஹூம் துவாங்கு முனாவிர் பிறந்த தினத்தை முன்னிட்டு மைடின் மலேசியா நிறுவனத்தின் நடவடிக்கைப் பிரிவுத் தலைமை நிர்வாகி விஷ்ணு வர்த்தனா பிஜேகே விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். நெகிரி செம்பிலான் மாநில அரசுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்து வரும் விஷ்ணுவின் சேவைக்காக இந்த விருது அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அவருடைய நடவடிக்கைத் தலைமைத்துவமும் சேவையும் மாநிலத்திற்கும் மக்களுக்கும் நன்மை அளித்திருக்கிறது. நெகிரி செம்பிலான் மாநில அரசுக்கும் தனியார்துறைக்கும் இடையே மிக வலுவலான ஒத்துழைப்பு இருப்பதை இந்தக் கௌரவம் பிரதிபலிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here