கோலாலம்பூர்:
1MDB நிறுவனத்தின் முன்னாள் வழக்கறிஞர் ஜாஸ்மின் லூ ஐ சுவானிடமிருந்து (Jasmine Loo Ai Swan) பல சொகுசுப் பொருள்களும் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவை 1MDB நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட பணத்தில் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் RM93.2 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களில் அதி சொகுசு ரிச்சர்ட் மில்லே வாட்ச் மற்றும் ஹெர்மேஸ் கைப்பை போன்ற கைப்பற்றப்பட்ட ஆடம்பரப் பொருட்களின் புகைப்படங்களை போலீசார் நேற்று வெளியிட்டுள்ளனர்.

– பாப்லோ பிக்காசோவின் (Pablo Picasso) இரு ஓவியங்கள்
– சொகுசு கைக்கடிகாரங்கள்
– சொகுசுக் கூட்டுரிமை வீடுகள்
– 13 கைப்பைகள்
– ஆவணங்கள்
ஆகியவை அவற்றில் அடங்கும்.
குறித்த பொருட்கள் லண்டன், அமெரிக்கா, சுவிட்ஸர்லந்து ஆகிய பகுதிகளில் கைப்பற்றப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 20 மில்லியன் டாலர் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் புக்கிட் டாமான்சாராவில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 625,500 ரிங்கிட் மதிப்பிலான பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜாஸ்மின் லூ, 2011ஆம் ஆண்டு நிறு வனத்தில் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவருக்கு மாதந்தோறும் 40,000 ரிங்கிட் சம்பளம் வழ ங்கப்பட்டது என்றும், Falcon தனியார் வங்கி யில் ஜோ லோவுடன் (Jho Low) இணைந்து வங்கிக் கணக்கு ஒன் றையும் அவர் வைத்திருப்பதாக விசார ணையில் தெரியவந்தது.
பல்வேறு நிறுவனங்களிலிருந்து ஜாஸ்மின் லூ பணம் பெற்றார் என்றும் அதைக் கொண்டு அவர் நியூயார்க், லண்டன் ஆகிய நகரங்களில் சொத்துகளை வாங்கினார் என்றும் கூறப்பட்டது.
மேலும் ஜாஸ்மின் லூவிற்குச் சிங்கப்பூரிலும் சில சொத்துகள் இருப்பதாக போலீசார் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்தையும் 1MDB நிறுவனத்திற்கே திருப்பிக் கொடுத்துவிட ஜாஸ்மின் லூ ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .









