காஷ்மீரில் ஊடுருவ முயற்சி; பாகிஸ்தானிய டிரோன்களை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்

பூஞ்ச்ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த ஆளில்லா விமானங்கள் எனப்படும் டிரோன்கள் ஊடுருவ முயன்றன.

இதில், இந்திய வான்வெளியில் அத்துமீறி நுழைய முயன்ற 3 டிரோன்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் காலை 5.45 மணி முதல் 6 மணிக்குள் நடந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய ராணுவத்தின் பதிலடியை தொடர்ந்து, சில டிரோன்கள் பாகிஸ்தானுக்கே திரும்பி சென்றுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மட்டுமின்றி சமீப நாட்களாக இதுபோன்ற அத்துமீறல்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்திய ராணுவமும் தீவிர கண்காணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

ஈரான் நாட்டை நேற்று அமெரிக்காவும், இஸ்ரேலும் கடுமையாக தாக்கின. இதில் போர் ஜெட் விமானங்கள் வான் வழியே சென்று தாக்குதல் நடத்தின. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது. இந்த சூழலில், பாகிஸ்தானின் அத்துமீறல் சம்பவம் முறியடிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here