இஸ்லாமியர்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை ஜகாத் வழங்குவது வழக்கமான ஒன்று. ஆனால் தான் ஜகாத் வழங்குவது மட்டுமல்லாமல் பல தொழிலதிபர்கள் நல்லுளங்களின் உதவியை நாடி வருபவர்கள் அனைவருக்கும் உதவியை வழங்கி வருகிறார் கோலாலம்பூர் மஹாத் தஹ்பீஸ் அல் ஃபரீதிய்யா நிறுவனரும் அலி மாஜு உணவக உரிமையாளருமான டத்தோ அல்ஹாஜ் ஜவ்ஹர் அலி தய்யூப்கான்@ அலி மாஜு.
32ஆவது ஆண்டாக வசதி குறைந்தவர்கள் எந்த மதத்தை இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் உதவிகள் வழங்கப்படும் என்றும் ஆண்டுக்கு ஆண்டு உதவிப் பெறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு அவர்கள் ஏழ்மையாக இருப்பதால் அல்ல என்றும் கொடுக்க வேண்டும் என்ற நம்மிடையே அதிகரிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று ரமலான் உதவிப் பொருட்களை எடுத்து வழங்க போலீஸ் படை துணைத்தலைவர் டான்ஶ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை நிரப்பு வருகை புரிந்து இயலாதவர்களுக்கு உதவிப் பொருட்களை எடுத்து வழங்கினார். இன்று 3,500க்கும் மேற்பட்டோருக்கு 27 பொருட்கள் அடங்கிய உதவிப் பொருட்களும் 5,000க்கும் மேற்பட்டோருக்கு உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டன.











