பிரதமர் மோடி – கனடா பிரதமர் சந்திப்பு; முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து

டெல்லி,கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி. இவர் 4 நாட்கள் பயணமாக கடந்த 27ம் தேதி இந்தியா வந்தார். தனி விமானம் மூலம் மராட்டிய மாநிலம் மும்பை வந்த மார்க் கார்னியை அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அவர் நேற்று முன் தினம் மும்பையில் பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்தார். இதனை தொடர்ந்து மார்க் கார்னி நேற்று டெல்லி சென்றார்.

இந்நிலையில், பிரதமர் மோடியை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.

இதனை தொடர்ந்து இந்தியா, கனடா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க கனடா ஒப்புக்கொண்டுள்ளது. அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்த பேச்சுவார்த்தையும் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here