பாரம்பரிய ஆடையில் கினபாலு மலையேறிய முதல் மலேசிய இந்தியர் நவீந்திரன் கிருஷ்ணன் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்

சிலர் பொழுதுபோக்காகவும் பலர் சாதனை படைப்பதற்காகவும் மலையேறும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். மலையேறும் பயிற்சியை மேற்கொள்ளும்போது அதற்கான பிரத்யேக ஆடைகளை அணிந்து செல்வது வழக்கமான ஒன்று என்பதனை அனைவரும் அறிவர்.  ஆனால் இந்தியர்களின் பராம்பரிய ஆடையில்  தனி நபராக  கினபாலு மலையேறிய முதல் மலேசிய இந்தியர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் ஈவுட் எஸ்டேட் (Heawood Estate) , சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் – துசிலா தம்பதியின் மகனான நவீந்திரன்.  தனிநபராக கடந்த மாதம் பிப்ரவரி 23ஆம் தேதி கினபாலு மலை உச்சியை அடைந்த இவர் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.  அவர் தற்போது சிங்கப்பூரில் உள்ள Securitas நிறுவனத்தில் Senior Operations Manager ஆக பணியாற்றி வருகிறார்.

தனது 40ஆவது வயதில் மலையேறும் பயிற்சியில்  ஈடுபட்ட இவருக்கு இவரின் தாயார் கூறிய வார்த்தைகள் எப்பொழுதும் நினைவில் இருந்து கொண்டே இருந்தது. சென்ற ஆண்டு அன்னபூர்ணா மலையேறும்போது  ஏன் பராம்பரிய ஆடையில் சென்று சாதனை படைக்கக் கூடாது என்று கேட்டார். அன்று தொடங்கியே எனக்கு என் தாயாரின் வார்த்தையை நிஜமாக்க வேண்டும் என்று செயலில் ஈடுபட்டு இன்று மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறேன் என்று பெருமையுடன் கூறுகிறார் நவீந்திரன் கிருஷ்ணன்.

குழுவாக மலையேறும்போது ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க முடியும். ஆனால் தனி நபராக மலையேறும்போது சவால்கள் அதிகமாக எதிர் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் சோதனைகளை கடந்தால் தான் சாதனை படைக்க முடியும் என்பதுதான் கினபாலு மலை உச்சியை அடைந்தபோது தான் உணர்ந்தேன். உங்கள் சாதனை தொடருமா என்ற கேட்டபோது நிச்சயமாக என்றார். ஏனெனில் நான் 40 வயதில்தான் மலையேறும் பயிற்சியைத் தொடங்கினேன். தற்பொழுது தனக்கு 42 வயதாகிறது. இன்னும் பல சாதனைகளை படைக்க தனக்கு ஆசை இருக்கிறது என்கிறார் நவீந்திரன் கிருஷ்ணன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here