புதுடெல்லி,தொலைக்காட்சி சேனல்களுக்கான தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகள் (TRP) அறிக்கையை ‘பார்க்’(BARC) நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், அடுத்த 4 வாரங்களுக்கு, அல்லது மறு அறிவிப்பு வரும் வரை செய்தி சேனல்களின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை வெளியிடுவதை நிறுத்தி வைக்க ‘பார்க்’ நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.









