போரால் தினசரி ரூ.8,180 கோடி செலவு: அமெரிக்கா

வாஷிங்டன்,ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படையினர் சரமாரி தாக்குதல் நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்தும் ஒவ்வொரு நாளுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு, அமெரிக்க ராணுவத்துக்கு செலவாகிறது.

தொடர்ந்து போர் நடைபெற்று வந்தால் அமெரிக்காவிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஈரானுக்கு எதிரான தாக்குதலில் தினசரி ரூ.8,180 கோடி செலவு செய்யப்படுவதாக அமெரிக்கா ஆய்வு அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.ஈரான் மீது தாக்குதலை தொடர்ந்த அமெரிக்காவுக்கு முதல் 100 மணி நேரத்தில் ரூ.33,966 கோடி செலவாகி உள்ளது.

மேற்கு ஆசிய நாடுகளின் அமெரிக்க ராணுவ முகாம் மீது நடத்தப்படும் தாக்குதலால் அமெரிக்காவுக்கு செலவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here