ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான ‘துரந்தர்’ திரைப்படம் உலகமெங்கும் சுமார் ரூ.1,300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது. பாகிஸ்தானுக்கு உளவாளியாகச் செல்லும் ரன்வீர் சிங் கதாபாத்திரம், அதில் வில்லனாக நடித்த அக்ஷய் கண்ணாவுக்கும் சமூக வலைதளத்தில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.





















