கோலாலம்பூர்:
சுங்கை பீசி அருகே வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் (NSE) செமந்தான் நோக்கிச் செல்லும் பாதையில் அமைந்துள்ள BHP பெட்ரோல் நிலையத்தின் விலை விளம்பரப் பலகை நேற்று இரவு திடீரெனத் தீப்பற்றி எரிந்தது.
நேற்று இரவு 9.57 மணிக்கு அவசர அழைப்பு கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து, ஸ்ரீ கெம்பாங்கான் தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து விரைந்து சென்ற வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஐந்து தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் இரவு 11 மணிக்கு தீ முழுமையாக அணைக்கப்பட்ட இச்சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை எனச் சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.






















