‘பெண்கள் ஆண்களை விட புத்திசாலிகள், தொலைநோக்குடன் சிந்திப்பார்கள்’ – ராகுல் காந்தி

திருவனந்தபுரம்,சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் கேரளாவில் மாணவிகளுடன் நடத்திய உரையாடலின் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:-

“நான் பெண்கள் தலைமை தாங்கிய குடும்பத்தில் வளர்ந்தவன். என் குடும்பத்தின் தலைவர் என் பாட்டி. என் குடும்பத்தில் எப்போதும் பெண்கள் தான் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள். பொதுவாக, பெண்கள் ஆண்களை விட புத்திசாலிகள். ஆண்கள் அவசரக்காரர்கள். பெண்கள் தொலைநோக்குடன் சிந்திப்பார்கள். அவர்கள் நேரடி அதிகாரத்துக்கு பதிலாக, மறைமுக அதிகாரத்தை பயன்படுத்துவார்கள். அது பயனுள்ளதாக இருக்கும்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோரும் மகளிர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here