பஞ்சாப் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 48-ஆக உயர்வு; பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறப்பு!

கோலாலம்பூர்:

பஞ்சாபில், கடந்த மூன்று தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு, ஏற்பட்ட வெள்ளத்தில், மேலும், இருவர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை, 48-ஆக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி, இதனால், 1.76 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன என்று, அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை தெரிவித்தனர் தெரிவித்தனர்.

மாநிலம் முழுவதும், மூடப்பட்டிருந்த அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், செப்டம்பர் 8-ஆம் தேதி முதல், மீண்டும் திறக்கப்படும் என்று, கல்வி அமைச்சர் ஹர்ஜோட் பெய்ன்ஸ் (Harjot Bains) தெரிவித்தார். ஏதேனும் பள்ளிகள் அல்லது கல்லூரிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அவற்றை மூடுவது குறித்து, அந்தந்த துணை ஆணையாளர்கள் (deputy commissioners), முடிவெடுப்பார்கள் என்றும், அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here