சினிமாவில் என் தேடல் ஓயாது – நடிகர் மம்முட்டி

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்முட்டி, இன்றளவும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக நடிப்பில் கலக்கி வருகிறார். இமேஜ் பற்றி கவலைப்படாமல் எல்லா வகையான கதாபாத்திரங்களிலும் அசத்துகிறார். வில்லன் கதாபாத்திரங்களிலும் மிரட்டுகிறார்.

சில மாதங்கள் உடல்நலக்குறைவால் ஓய்வில் இருந்த மம்முட்டி, தற்போது மீண்டும் நடிப்பில் களமிறங்கி உள்ளார். மும்முரமாக படங்கள் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மம்முட்டியிடம், ‘சினிமாவில் நிறைவான நடிப்பை வழங்கி வருகிறீர்களே… எப்படி? என்று கேட்கப்பட்டது. அதற்கு, ‘சினிமாவில் என் தேடல் ஓயாது. எனவே நிறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை. அடுத்த படம் இன்னும் சிறப்பாக நடிக்கவேண்டும் என்பதுதான் என் இலக்கு’ என்று அவர் பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here