தேசிய சிறார் ஆணையம் அமைக்கப்படுவதன் அவசியம் குறித்து அரசாங்கம் ஆய்வு

கோலாலம்பூர்,

தேசிய சிறார் ஆணையம் அமைக்கப்படுவதன் அவசியத்தை அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாக பிரதமர்துறை அமைச்சர் (சட்டம் – கட்டமைப்பு உருமாற்றம்) டத்தோஸ்ரீ அஸாலினா ஒஸ்மான் சைட் தெரிவித்தார்.

இது குறித்து அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ரட்ஸி இஸ்மாயில் முன்வைத்த ஆலோசனை காலத்திற்கு ஏற்றது. அந்த ஆலோசனை நிச்சயம் பரிசீலனை செய்யப்பட வேண்டும்

குறிப்பாக சிறார் பாதுகாப்பு, நலன் குறித்த பல்வேறு விவகாரங்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் நாட்டின் தற்போதைய சூழலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே நடப்பில் உள்ள கட்டமைப்புடன் மோதல் ஏற்படாமல் இருப்பதை உறுதிச் செய்ய பொறுப்பு, கட்டமைப்பு, சட்டம், பொருளாதார விளைவுகள் உள்ளிட்ட அம்சங்கள் சார்ந்து அரசாங்கம் அந்த ஆலோசனையை நெருக்கமாக பரிசீலனை மேற்கொண்டு வருகின்றது.

இப்போதைக்கு சிறார் உரிமை விவகாரங்கள் தொடர்பான செயல்பாடுகளை சுஹாகாம் கீழ் இயங்கும் சிறார் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக சிறார் உரிமை மாநாடு ஏற்பாடு, சிறார் உரிமை மீறல் தொடர்பான புகார்கள் குறித்த விசாரணை உள்ளிட்ட செயல்பாடுகளை அந்த ஆணையம் மேற்கொண்டு வருவதாக அவர் இன்று மக்களவை கூட்டத் தொடரில் விவரித்தார்.

எனவே அந்த ஆணையத்தில்ன் பங்களிப்பு, அதிகாரத்தை மேம்படுத்த அரசாம்க்கம் முனைகிறது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here