துபாய்-மதுரை இடையே விமான சேவை ரத்து: ரம்ஜான் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல முடியாமல் பயணிகள் தவிப்பு

துபாய்,அமெரிக்கா -இஸ்ரேல், ஈரான் இடையே நடந்து வரும் போர் காரணமாக அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் விமான சேவை கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துபாயில் இருந்து தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர் செல்ல மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது சூழ்நிலையில் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது ரமலான் மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பலர் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட துபாயில் இருந்து மதுரைக்கு நேரடியாக செல்லும் ‘ஸ்பைஸ்ஜெட்’ விமானத்தில் முன்பதிவு செய்திருந்தனர். அனால் சூழ்நிலை காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

இதேபோல் அபுதாபி- மதுரைக்கு இயக்கப்படும் இண்டிகோ நேரடி விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது. தென்மாவட்ட பயணிகள் சொந்த ஊர் செல்ல பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு, மத்திய அரசிடம் பேசி சிறப்பு நேரடி விமானம் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் ஒரு சில விமான நிறுவனங்கள் அதிகமான கட்டணமும் வசூலித்து வருகிறது. துபாயில் இருந்து சென்னை செல்ல ஒருவழி பயண கட்டணம் 600 முதல் 700 திர்ஹாமாக இருந்த நிலையில், தற்போது துபாயில் இருந்து மும்பை வழியாக சென்னை செல்ல ஒரு வழி பயண கட்டணம் 1,850 திர்ஹாமாக அதிகரித்துள்ளது. இது பயணிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சார்ஜாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஏர் அரே பியா விமான நிறுவனம் சார்ஜா, அபுதாபி மற்றும் ராசல் கைமாவில் இருந்து வருகிற 22-ந் தேதி வரை குறிப்பிட்ட விமான சேவைகளை இயக்கி வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் தகவலுக்கு விமான நிறுவன இணைதளத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here