முடா கட்சியின் புதிய தலைவராக அமிரா ஆயிஷா தேர்வு

கோலாலம்பூர் | மார்ச் 14, 2026:

முடா (MUDA) கட்சியின் புதிய தலைவராக அமிரா ஆயிஷா அப்துல் அஜிஸ் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சியின் 25 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய செயற்குழு (CEC) இந்த முடிவை எடுத்துள்ளது.

புத்ரி வாங்சா (Puteri Wangsa) சட்டமன்ற உறுப்பினரான அமிரா ஆயிஷா, கடந்த 2023 நவம்பரில் சையத் சாதிக் பதவி விலகியதிலிருந்து இடைக்காலத் தலைவராகச் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தற்போது அவர் 2026–2029-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்திற்கு முழுநேரத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மொத்தம் 31 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், 125 பிரதிநிதிகள் வாக்களித்து 25 பேர் கொண்ட மத்திய செயற்குழுவைத் தேர்ந்தெடுத்தனர்.

அதனடிப்படையில், முடா கட்சியின் புதிய நிர்வாகக் குழு பின்வருமாறு,

பதவிபெயர்
தலைவர்அமிரா ஆயிஷா அப்துல் அஜிஸ்
துணைத் தலைவர்ஜைடல் பஹாருதீன்
துணைத் தலைவர்கள் (Vice-Presidents)லேபன் சித்தார்த், ஃபாயிசா ரிசால்மேன், டாபி சியூ, டாக்டர் சிவ பிரகாஷ் ராமசாமி
பொதுச் செயலாளர்நுரைனி ஹசிகா ஷாஃபி
தகவல் தலைவர்ரஷீத் அபு பக்கர்

 

சையத் சாதிக்கிற்குப் பிறகு முடா கட்சியின் ஒரு புதிய அத்தியாயம் அமிரா ஆயிஷாவின் தலைமையில் தொடங்கியுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான கட்சியின் வியூகங்கள் மற்றும் பலத்தை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு இந்த இளைய தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here