இல்லாதவர்களுக்கு நாம் உதவினால் இறைவன் நமக்கு உதவுவார்: ஜோஹாரி

இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் நாம் உதவினால் இறைவன் நமக்கு உதவிடுவார் என்று மஹாத் தஹ்பீஸ் அல் ஃபரீதிய்யா தலைவர் டத்தோ அல்ஹாஜ் ஜவஹர் அலி தய்யூப்கான்@ டத்தோ அலி மாஜு ஏற்பாட்டில் நடைபெற்ற ஹரிராயாவிற்கான அரிசி வழங்கும் நிகழ்வின்போது  மக்களவை சபாநாயகர் டான்ஶ்ரீ டத்தோ ஜோஹாரி பின் அப்துல்லா தெரிவித்தார்.

உதவி வழங்கினால் இனம் மதம் பாராமல் வழங்க வேண்டும் என்பதற்கு அலி மாஜு முன்னுதாரணமாக இருக்கிறார் என்றும அவர் கூறினார். கடந்த 32 ஆண்டுகளுக்காக இல்லாதவர்களுக்கு உதவி வரும் அவரின் கருணை மிகவும் அளப்பரியது. உதவி வழங்க வேண்டும் என்ற ஒரு சிலருக்கே இருக்கிறது. அதனால் அவரின் உதவித் திட்டம் இனி வரும் காலங்களில் தொடர வேண்டும் என்று  என தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய மஹாத் தஹ்பீஸ் அல் ஃபரீதிய்யா தலைவர் டத்தோ டத்தோ அலி மாஜு இறைவனின் கருணையாலும் நல்லுளங்களின் ஆதரவினாலும் வசதி குறைந்தவர்களுக்கு ஜகாத் வழங்கி வருவதாகவும் 5ஆவது ஆண்டாக 5 கிலோ அரிசி பாக்கெட் வழங்கி வருவதாகவும் அடுத்தாண்டு அதிகமான உதவிகள் கிடைத்தால் மேலும் அத்திவாசிய உணவுப் பொருட்களை வழங்க எண்ணம் கொண்டிருக்கிறோம் என்றார்.

இன்று 3,333 பேருக்கு அரிசி பாக்கெட் வழங்கியிருப்பதாகவும் இதற்கு ஜாஸ்மின் அரிசி நிறுவனம் 500 அரிசி பாக்கெட்டுகளை இலவசமாக வழங்கியதாகவும் மற்றவற்றை அவர்களின் அடக்க விலைக்கே வழங்கியதாகவும்  தெரிவித்தார். பெருநாளை நாம் எப்படி மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோமா அதேபோல் வசதி குறைந்தவர்களுக்கும் பெருநாளை கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் உதவிகளை வழங்கி வருவதாக டத்தோ அலி மாஜு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here