PTPTN நிதி உதவி – 72 அஸ்னாஃப் மாணவர்கள் பயன்

உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் குறைந்த வருமானம் கொண்ட மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேசிய உயர்கல்வி நிதி நிறுவனம் (PTPTN) ‘பந்துவான் லெஸ்தாரி சிஸ்வா மடானி’ (BANTUAN LESTARI SISWA MADANI) உதவித் திட்டத்தின் கீழ் 36,000 ரிங்கிட் நிதியுதவியை வழங்கியது.

இந்த முன்னெடுப்பின் மூலம் போர்ட்டிக்சன், நீலாய் பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 72 அஸ்னாஃப் மாணவர்கள் தலா 500 ரிங்கிட் நிதியுதவியைப் பெற்றனர். வாழ்க்கைச் செலவினங்களால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று இந்த நிதியுதவி குறித்து பி.டி.பி.டி.என். நிறுவனம் குறிப்பிட்டது.

இதற்கான 500 ரிங்கிட் உதவித்தொகை மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளதாக பி.டி.பி.டி.என். ஊடகவியலாளர்களுடனான நோன்புத் துறப்பு நிகழ்ச்சியின் போது அதன் தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம் தெரிவித்தார்.


இந்த உதவித்தொகையை மாணவர்களுக்கு வழங்கிய பின்னர் உரையாற்றிய அவர், ரமலான் மாதத்தை முன்னிட்டு ‘இம்ரா ரமலான்’ (IMRAN) மற்றும் ‘ஜோம் கெஜு’ ஆகிய திட்டங்களின் கீழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும் வாழ்வாதாரத்திற்கும் பி.டி.பி.டி.என். தொடர்ந்து பல்வேறு உதவிகளையும் ஆதரவையும் வழங்கும் என்று உறுதியளித்தார். இத்திட்டங்களின் வழி மாணவர்கள் எவ்வித பொருளாதாரத் தடையுமின்றி தங்களின் உயர்கல்வியைத் தொடர முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடன் பெற்றவர்கள், அதைத் திரும்பச் செலுத்துவதில், ‘SIMPAN SSPN’ வாயிலாக நிதித் திட்டமிடலின்முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் ஆற்றி வரும் பங்கை டத்தோஸ்ரீ நோர்லிஸாபாராட்டினார்.

மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த பிறகு கடன் சுமையில் சிக்காமல் இருக்கச் சேமிப்புப் பழக்கத்தைஊக்குவிப்பதில் பி.டி.பி.டி.என் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here