நோன்புப்பெருநாள் விடுமுறைப் பயணம் : இன்று மாலை பலத்த மழை மற்றும் இடிமின்னல் ஏற்படலாம் -மெட்மலேசியா எச்சரிக்கை

கோலாலம்பூர், மார்ச் 18, 2026:

ஹரி ராயா ஐடில்பித்ரி பெருநாளை முன்னிட்டு மில்லியன் கணக்கான மலேசியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தீபகற்ப மலேசியாவின் பல மாநிலங்களிலும் சரவாக்கிலும் இன்று மாலை பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை 7:00 மணி வரை நீடிக்கும் இந்த இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை மாலை 4:00 மணிக்கு வெளியிடப்பட்டது.

இந்த வானிலை பேராக் (Perak): கிரியான், லாரூட், மாத்தாங் மற்றும் செலாமா, கோலாகங்சார், கிந்தா, பேராக் தெங்கா, காம்பார், பாகன் டத்தோ, ஹிலிர் பேராக், பாத்தாங் பாடாங் மற்றும் முவாலிம், சிலாங்கூர் (Selangor): சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், ஹுலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட் மற்றும் சிப்பாங், கூட்டரசு பிரதேசங்கலான கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா மற்றும் ஜோகூர் (Johor): பொந்தியான், குலாய் மற்றும் ஜோகூர் பாரு என்பனவும் சரவாக் (Sarawak): ஸ்ரீ அமான், சாரிகேய், சிபு, முக்கா, காபிட், பிந்துலு மற்றும் மிரி என்பனவும் இந்த வானிலையை எதிர்கொள்ளும்.

ஹரி ராயா பண்டிகை வரும் மார்ச் 21 அன்று கொண்டாடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று முதல் நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். மோசமான வானிலை காரணமாகச் சாலைகள் வழுக்கக்கூடும் என்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here