ஈஸ்ட்-வெஸ்ட் நெடுஞ்சாலையில் கோர விபத்து: 70 வயது முதியவர் பலி; ஐவர் படுகாயம்

ஈப்போ | திங்கள், 23 மார்ச் 2026:

கெரிக்-ஜேலி ஈஸ்ட்-வெஸ்ட் நெடுஞ்சாலையில் இன்று காலை நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர்.

புன்சாக் தித்திவாங்சா (Puncak Titiwangsa) ஓய்வு மற்றும் சேவை பகுதிக்கு (R&R) அருகே காலை 11:24 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகப் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு கெரிக் மற்றும் ஜேலி நிலையங்களில் இருந்து 17 தீயணைப்பு வீரர்கள் 5 வாகனங்களுடன் விரைந்து சென்றனர்.

விபத்தில் சிக்கிய இரண்டு வாகனங்களில் ஒன்று SUV ரகத்தைச் சார்ந்தது, மற்றொன்று MPV ரகமாகும்.

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர வடிகாலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 70 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்ற மூவர் காயமடைந்தனர்.

மோதலின் வேகத்தில் சாலையோரத்திற்குத் தள்ளப்பட்டது. இதில் இருந்த இருவர் காயமடைந்தனர்.

“பாதிக்கப்பட்ட ஐந்து பேரும் முதலுதவிக்குப் பின் உடனடியாக ஜேலி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்தவரின் உடல் மேலதிக விசாரணைக்காகப் போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது,” என்று தீயணைப்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமட் தெரிவித்தார்.

தற்போது காவல்துறையினர் விபத்துக்கான சரியான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here