உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்திய ரஷியா …

ரஷியா-உக்ரைன் போர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில்,

உக்ரைனின் பல்வேறு இடங்களை குறிவைத்து நள்ளிரவில் 392 ட்ரோன்கள் மற்றும் 34 ஏவுகணைகளை ஏவி மிகப்பெரிய தாக்குதல் நடத்தி உள்ளது ரஷியா.

இதில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாகவும், குழந்தைகள் உட்பட பலர் படுகாயம் அடைந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷிய நகரங்கள் மீது உக்ரைனும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், வடமேற்கு ரஷியாவில் உள்ள பிரிமோர்ஸ்க் துறைமுகம், நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் மையங்களில் ஒன்றாகும். இது நாளொன்றுக்கு 10 லட்சம் பீப்பாய்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் திறன் கொண்டது.இதன் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதில் எரிபொருள் நீர்த்தேக்கங்கள் சேதமடைந்து உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here