உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு: மலேசியாவில் RON95 பெட்ரோல் விலை RM1.99 ஆக தொடர்ந்து நீடிப்பு!

கோலாலம்பூர் | மார்ச் 25, 2026:

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. இருப்பினும், மலேசிய மக்களின் வாழ்க்கைச் செலவினத்தைக் கருத்தில் கொண்டு, மானிய விலையிலான RON95 பெட்ரோல் விலையை லிட்டருக்கு RM1.99 என்ற அளவிலேயே மாற்றமின்றித் தக்கவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாளை முதல் மார்ச் 26 – ஏப்ரல் 1 வரையான காலப்பகுதியி எரிபொருள் விலை மாற்றங்கள் தொடர்பில் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய விலைப்பட்டியலின்படி, மற்ற எரிபொருட்களின் விலைகள் உலகளாவிய சந்தைப் போக்கிற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளன:

RON95 (மானிய விலை) பெட்ரோல் லிட்டருக்கு RM1.99 ஆக மாற்றமில்லாது நீடிக்கிறது. அதேநேரம் RON97 பெட்ரோல் லிட்டருக்கு RM4.55 இருந்து RM5.15 ஆக உயர்ந்துள்ளது. மானியமற்ற RON95 பெட்ரோல் லிட்டருக்கு RM3.27 இருந்து RM3.87 ஆக உயர்ந்துள்ளது.

டீசல் விலை தீபகற்ப மலேசியாவில் லிட்டருக்கு RM4.72 இருந்து RM5.52 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் டீசல் (சபா, சரவாக், லபுவான்) ஆகிய இடங்களில் RM2.15 ஆக மாற்றமின்றி தொடர்கிறது.

வெப்ப அலை மற்றும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், அரசு தனது நேரடி பண உதவித் திட்டங்களை (Budi Cash Assistance) வலுப்படுத்தியுள்ளது:

மேலும் ‘Budi Individu’ மற்றும் ‘Budi Agri-Komoditi’ திட்டங்களின் கீழ் தகுதியுள்ள நபர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை RM200-லிருந்து RM300-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அத்தோடு தகுதியுள்ள மலேசியர்கள் தொடர்ந்து RM1.99 விலையில் பெட்ரோலைப் பெறுவதை உறுதி செய்ய இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மானியக் கசிவைத் தடுக்கக் கடுமையான கட்டுப்பாடுகள்மானிய விலையிலான பெட்ரோல் மற்றும் டீசல் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அரசு பின்வரும் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here