300-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும் லெஜண்ட் சரவணனின் “லீடர்”

2022-ம் ஆண்டு வெளியான ‘தி லெஜண்ட்’ படத்தை தொடர்ந்து, தொழில் அதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், ‘லீடர்’ என்ற புதிய படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார், இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் நடிக்கிறார். மேலும், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், லால், பாகுபலி பிரபாகர், அமிர்தா அய்யர், வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்திற்கு, எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் இந்த படத்தை தயாரித்துள்ளார். தணிக்கை வாரியம் இப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது

இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் யூடியூபிலேயே 2 கோடி பார்வைகளைக் கடந்தது. மேலும், லெஜண்ட் சரவணனின் நடிப்பும் உடல்மொழியும் ஆச்சரியப்படுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்திலேயே லீடர் 300க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் நாளை வெளியாகவுள்ளது. இப்படத்தின் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here