பாஜகவின் தேர்தல் அறிக்கை ஒரு தோல்வி; மகளிர் இட ஒதுக்கீடு வெறும் தந்திரம்: டோலி ஷர்மா கடும் விமர்சனம்

புதுச்சேரி,வரும் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி வாக்கு சேகரிக்க உள்ளார். ராகுல் காந்தி நாளை காலை சுமார் 11 மணியளவில் வருகிறார். அப்போது புதுச்சேரி மக்களிடையே உரையாற்றுவதோடு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையையும் வெளியிடுவார்.

கடந்த தேர்தலின் போது பாஜக அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும், அந்த அறிக்கை முற்றிலும் தோல்வியடைந்து விட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் புதிய நலத்திட்டங்கள் போன்ற எதற்கும் பாஜகவின் செயல்பாடுகளில் இடமில்லை என தெரிவித்தார்.

தேர்தலில் மாநில அந்தஸ்து பெற்று தருவதாக பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், தற்போது வரை அதை நிறைவேற்றாத நிலையில், மீண்டும் அதே கோரிக்கையை முன்வைப்பது மக்களை ஏமாற்றும் செயல் என அவர் சாடியுள்ளார்.

பொது தேர்தலுக்கு முன்பாக ஒரு சிறப்பு கூட்டத்தை கூட்டி, பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று அவர்கள் கூறியது ஒரு போலியான அறிவிப்பு மற்றும் மக்களை ஏமாற்றும் ஒரு “தந்திரம்” என்று டோலி ஷர்மா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here