சிக்கிமில் நிலச்சரிவால் சிக்கி தவித்த 1,321 சுற்றுலாப்பயணிகள் பத்திரமாக மீட்பு

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமின் வடக்கு பகுதியில் மங்கன் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள லாச்சென் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சாலைப் போக்குவரத்து தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் லாச்சென் பகுதியில் க்கித்தவித்த 1,321 சுற்றுலாப் பயணிகளும், 84 உள்ளூர் மக்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளை தரம் சூ பகுதியிலிருந்து சுங்தாங் வரையிலும், அங்கிருந்து தொடர்ந்து காங்டாக்-கும் அழைத்துச் செல்ல, பேருந்துகள் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தரம் சூ பகுதியில் மீட்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், சிக்கிம் சமூக நலத்துறை மந்திரியுமான சம்டுப் லெப்சா, ராணுவம் மற்றும் எல்லைச் சாலைகள் அமைப்பின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் தொடர் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here