ஜெலுத்தோங்கில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 5ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் ஒருவருக்கு காயம்

ஜார்ஜ் டவுன்: ஜெலுத்தோங் தாமான் ஶ்ரீ பேராக் என்ற இடத்தில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் இருந்து, அதே கட்டிடத்தின் முதல் மாடிக் கூரையின் மீது விழுந்ததில் ஒருவர் படுகாயம் அடைந்தார். இரவு சுமார் 7 மணியளவில், எட்டு பேர் கொண்ட குழு ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

கட்டிடத்தின் கூரையிலிருந்து மயக்க நிலையில் இருந்த 53 வயது மதிக்கத்தக்க அந்த நபரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக செயல்பாட்டுத் தளபதி அக்மல் நசுஜன் கூறினார். பாதிக்கப்பட்டவர் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவனது தாய் தெரிவித்துள்ளார் என அக்மல் ஒரு அறிக்கையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here