ராஜஸ்தான்: பிரதமர் மோடி நாளை துவக்கி வைக்க உள்ள சுத்திகரிப்பு ஆலையில் இருந்து கிளம்பிய புகை

ஜெய்ப்பூர் ராஜஸ்தானின் பலூத்ரா நகரில் பச்பத்ரா பகுதியில் இந்தியாவின் முதல் பசுமைவெளி ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு ஆலை ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. ராஜஸ்தான் அரசுடன் இணைந்து, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் இதனை செயல்படுத்த உள்ளது.

பிரதமர் மோடி இதனை நாளை துவக்கி வைக்க இருந்த நிலையில், திடீரென இதில் இருந்து புகை கிளம்பியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கரும்புகை வான் வரை பரவியது. எனினும், அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு, அதனை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இறக்குமதியை சார்ந்திராமல் உள்நாட்டு உற்பத்தி திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆலை அமைக்கப்பட்டு உள்ளது. இது, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சூழலில், இந்த சுத்திகரிப்பு ஆலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்கான திட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here