கோல கிராயில் எம்16 ரக துப்பாக்கியுடன் பெண் கைது

கோல கிராய்: கோல்ட் எம்16 ரக துப்பாக்கி உட்பட ஐந்து துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொது நடவடிக்கைப் படை (GOF) தென்கிழக்கு பிரிகேட் தளபதி எஸ்.ஏ.சி. அஹ்மத் ராட்ஸி ஹுசைன், திங்கட்கிழமை (ஏப்ரல் 20) மாலை 6.45 மணிக்கு நடைபெற்ற ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

வீட்டை சோதனையிட்டபோது அனைத்து துப்பாக்கிகளும் கண்டெடுக்கப்பட்டன என்று அவர் கூறினார். சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட பொருட்களும் குவா மூசாங் காவல் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

1971 ஆம் ஆண்டு துப்பாக்கிச் (அதிகரித்த தண்டனைகள்) சட்டத்தின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார். வனவிலங்கு பாதுகாப்பு, தேசிய பூங்காக்கள் துறை (பெர்ஹிலிட்டன்), வனத்துறையுடன் இணைந்து இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக சிறப்பு உதவி ஆணையர் அஹ்மத் ராட்ஸி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here