சட்ட உதவி மற்றும் பொதுப் பாதுகாப்புச் சட்டம் 2025-இன் கீழ் வழங்கப்படும் சேவைகளின் வரம்பு, தொழிலாளர் தகராறுகள், நுகர்வோர் பாதுகாப்பு, குடும்ப விவகாரங்களை உள்ளடக்கி, உரிமையியல், ஷரியா மற்றும் குற்றவியல் வழக்குகளைச் சென்றடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் துறையின் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோ செரி அஸலினா ஓத்மான் சயீத், விரிவாக்கப்பட்ட இந்தச் சேவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட நலிவடைந்த குழுக்களுக்கு முன்னுரிமை அளிப்பதோடு, குடியுரிமை வேறுபாடின்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் சட்டப் பிரதிநிதித்துவத்தையும் விரிவுபடுத்துகின்றன என்று கூறினார்.
கைது செய்யப்பட்ட தருணத்திலிருந்து மேல்முறையீடு வரை, நீதிமன்றக் காவல் விண்ணப்பங்கள் முதல் பிணை விசாரணைகள் மற்றும் வழக்கு நடவடிக்கைகள் வரை, குற்றவியல் சட்ட உதவி இப்போது முழுமையாக வழங்கப்படுகிறது. இதன் நன்மைகள் தெளிவானவை: மக்கள், குறிப்பாக நலிவடைந்தோர், அதிக சட்டச் செலவுகளின் சுமையின்றி நியாயமான பிரதிநிதித்துவத்தைப் பெறுகிறார்கள், மேலும் அவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்றன என்று அஸலினா இன்று ஒரு முகநூல் பதிவில் கூறினார்.









