இளம் தலைமுறையினர் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க தடை – இங்கிலாந்தில் புதிய சட்டம் …

லண்டன்,2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த அனைவரும் புகைபிடிப்பதைத் தடை செய்து ‘புகையிலையற்ற தலைமுறையை’ உருவாக்கும் இங்கிலாந்தின் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு “புகையிலை மற்றும் வேப்ஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மசோதாவிற்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இதன்படி, 17 வயது மற்றும் அதற்குக் குறைவானவர்கள் சிகரெட் வாங்குவது தடை செய்யப்படுகிறது. மேலும், 2009 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு பிறந்த எந்த நபரும் தனது வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது.

17 வயதுக்குட்பட்டவர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தைத் தொடங்காமல் தடுப்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும். இந்த “புகையிலை மற்றும் வேப்ஸ்” மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம், இன்றைய இளம் தலைமுறையினர் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்குவதற்கு தடை விதிக்கப்படும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here