ஓடிடியில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் “ஹேப்பி ராஜ்” … எதில், எப்போது பார்க்கலாம்?

பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர் மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் ‘ஹேப்பி ராஜ்’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ கெளரி பிரியாவும் முக்கிய கதாபாத்திரங்களில் அப்பாஸ் மற்றும் ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடலாக “ஆடினே இருப்பேன்” வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அப்பா – மகன் பாசத்தை மையப்படுத்தியும் ஜாலியான காதல் கதையையும் பிரதானப்படுத்திய இப்படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், ஹேப்பி ராஜ் திரைப்படம் வரும் 24 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here