மாமன்னர் தம்பதியர் மதீனா சென்றடைந்தனர்

மாமன்னர் தம்பதியர் நேற்று சவூதி அரேபியாவின் மதீனாவை சென்றடைந்தனர். அவர்களை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம், உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு (மலேசியாவில் இரவு 9 மணிக்கு) இளவரசர் முகமது பின் அப்துல்லாஜிஸ் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.

பகாங் ரீஜண்ட் தெங்கு ஹசனல் இப்ராஹிம் ஆலம் ஷா அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் அவர்களது குழந்தைகளை மதீனா கவர்னர் இளவரசர் பைசல் பின் சல்மான் அல் சவூத் அவர்களை வரவேற்றதாக இன்று இஸ்தானா நெகாராவின் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அல்-சுல்தான் அப்துல்லா மற்றும் துங்கு அசிசா ஆகியோர் ஹஜ் செய்ய ஜூலை 1 வரை மதீனா மற்றும் மக்காவில் இருக்க திட்டமிடப்பட்டுள்ளது. சவூதி அரேபியா அரசு ஹஜ் சடங்குகளின் உச்சமாக விளங்கும் வுகுஃப் தினம் ஜூன் 27 செவ்வாய்க்கிழமையும், தியாகத்திருநாள் ஜூன் 28 புதன்கிழமையும் என்று அறிவித்தது. மலேசியாவில் உள்ள இஸ்லாமியர்கள் ஜூன் 29 அன்று தியாக திருநாளைக் கொண்டாடுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here