விஷால் பட பிரச்சனை காரணமாக லேட்டாக வெளியான நடிகை ஸ்ருதி ஹாசன் திரைப்படம்

நடிகை ஸ்ருதிஹாசன் தெலுங்கில் நடித்துள்ள படம், கிராக்.
இந்த படத்தில் ரவிதேஜா ஹீரோவாக நடித்துள்ளார். இதை தயாரித்தவர் தாகூர் மது. இவர் தமிழில் அயோக்யா என்ற படத்தை தயாரித்திருந்தார். அந்தப் படத்தை வெளியிட ரூ.5 கோடி கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாததால், கிராக் படத்துக்கு சிக்கல் எழுந்தது.
அதன் பின்னர் பிரச்சினை சுமூகமாக முடிக்கப்பட்டு படம் வெளியிடப்பட்டிருக்கிறது .
தாகூர் மது தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இதனை ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படம் மே மாதம் வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக தள்ளிப் போனது. இப்படியிருக்க , நேற்று முன்தினம் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
கொரோனா பரவலுக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய ஹீரோ படமாக இது அமைந்தது .
இதன் காரணமாக ஆந்திரா , தெலங்கானாவில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here