வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில் மலேசியா செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ற வேண்டும் என்ற இலக்கை அரசாங்கம் கொண்டிருக்கிறது என்று நாடாக உருமாற டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். இந்த இலக்கை அடைவதில் மடானி அரசாங்கம் தொடர்ந்து முனைப்புக்காட்டி வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலக்கவியல் தொழில்நுட்பத்தின் மூலம் கடபந்த ஆண்டு மலேசியாவின் சராசரி உள்நாட்டு மொத்த உற்பத்தியில் அதன் பங்களிப்பு சுமார் 25.05 விழுக்காடாகப் பதிவாகி இருக்கிறது. 2030ஆம் ஆண்டுவாக்கில் இது 30 விழுக்காடு வரை உயர வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இலக்கவியல் தொழில்நுட்பம் அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்க வேண்டும்.
கல்வித்துறையில் இலக்கவியல் தொழில்நுட்பம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள பள்ளிகள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்றும வர தெரிவித்தார். இலக்கவியல் தொழில் நுட்பத்தில் தமிழ்ப்பள்ளிகள் சிறந்து விளங்க தலைமையாசிரியர் பங்கு அளப்பரியது என்றார்அவர்.
தேசிய அளவில் தமிழ்ப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான இலக்கவியல் தலைமைத்துவம்- மடானி கருத்தரங்கம் ஆகியவை மலாக்காவில் நடைபெற்ற நிலையில் கோபிந்த்சிங் அதனைத் தொடக்கி வைத்து பேசினார். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்தத் துறையில் பலன் பெறுவதற்கு டிஜிட்டல் அமைச்சு உறுதுணையாக இருக்கும் என்றார் அவர்.
470 தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர். மலேசிய இலக்கவியல் கூட்டுறவு நிறுவனத் தலைவர் எட்ரியன்மார்சேலஸ், ஆசிய வணிக கல்வி மையத்தின் செயற்கை நுண்ணறிவுப் பேராசிரியர் டேவிட் ஆசிர்வாதம் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.





















