இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மத்திய அரசாங்கத்தால் மட்டும் தீர்வு காண முடியாது. மாறாக அது தொடர்பான பல்வேறு இலாகாக்கள், மாநில அரசுகள் எனும் கூட்டு முயற்சியால் மட்டுமே எந்தவொரு வழிபாட்டுத் தலத்தின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண அமைச்சரவை தீர்மானித்துள்ளது என்று டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்கள் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன குறிப்பாக இந்து ஆலய விவகாரங்கள் வெறும் அமைச்சரவையை மட்டும் சார்ந்ததல்ல.
ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ள நிலம், ஆர்ஓஎஸ் பதிவு, ஊராட்சி மன்றங்களின் அங்கீகாரம் ஆகிய அடங்கியுள்ளன. பல விவகாரங்கள் இதில் நில விவகாரங்கள் யாவும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனன். ஆலய பதிவு அனைத்தும் ஆர் ஓஎஸ் வசம் உள்ளது. அந்த ஆலயங்களின் அங்கீகாரம் தொடர்பான அனைத்து அனுமதிகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களில் அங்கீகாரத்திற்கு உட்பட்டது.
ஆலய விவகாரங்களை தீர்க்க பல இலாகாக்கள் ஒன்றிணைந்து கூட்டாக முயற்சியை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் அதற்கான தீர்வை காண முடியும் என்று ஜாலான் மஸ்திட இந்தியாவில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பதர காளியம்மன ஆலய 133ஆவது வருடாந்திர திருவிழாவில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு சொன்னார். குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்தில் லிமாஸ் அமைப்பு இருப்பது போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட்டுள்ள இஸ்லாம் அல்லாதோர் விவகாரப் பிரிவின் மூலம் ஆலய விவகாரங்களை கையாள முடியும் என்று அவர் சொன்னார்.
நடவடிக்கைகள் அதே வேளையில் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் புதிய இடத்தில் இடமாற்றம் காண்பதற்கான முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முன்பு இவ்வாலய இடமாற்ற விவகாரம் சாச்சையாக வெடித்தபோது அதனை சுமூகமாக தீர்வு காண ஆலய நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கியதை நினைவுக்கூர்ந்த கோபிந்த சிங், புதிய ஆலயத்திற்கான கட்டுமானப் பணிகள நடைபெற்று வரும் இடத்தையும் அவர் பார்வையிட்டார். இதனிடையே, ஆலயத்தின் வருடாந்திர திருவிழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர் என்று ஆலயத் தலைவர் டாக்டர் க.பார்த்திபன் தெரிவித்தார்.
இவ்வாலயம் புதிய இடத்தில நிர்மாணிப்பதற்கு ஏதுவாக அடித்தள வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதன் பின்னர் ஆலயப் பணிகள தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு ஓராண்டுக்குள் ஆலயப் பணிகள் நிறைவு பெற ஆலய நிர்வாகம் இலக்குக் கொண்டுள்ளது. மேலும் ஆலயத் திருப்பணி நிறைவு பெற பொதுமக்களின் உதவியை ஆலய நிர்வாகம் எதிர்பார்க்கிறது என்றும் பார்த்திபன் குறிப்பிட்டார். அதோடு நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு ஆலயத்தில் அன்னையர்களுக்கு கௌரவிக்கும் முதியோர்களை கௌரவிக்கும் வகையில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. அன்னையர்களுக்கு மாலை, பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டதோடு அமைச்சர் கோபிந்த் சிங், அவரின் துணைவியார், கோபிந்த் சிங்கின் சிறப்பு அதிகாரி சுரேஸ் சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ரா.தங்கமணி, பி.மலையாண்டி










