அன்னையருக்கு மரியாதை செலுத்திய மலேசிய இந்து சங்கம் ஈப்போ வட்டார பேரவை

அன்னையர் தினத்தை முன்னிட்டு மலேசிய இந்து சங்கம் ஈப்போ வட்டார பேரவை சார்பில் கம்போங் தய்லி பகுதியில் வசிக்கும் தாய்மார்கள், மூத்த பெண்களை கௌரவிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஈப்போ வட்டார இந்து சங்க தலைவர்  ஹினோத் குமார் ;   கம்போங் தய்லி பகுதியில் வாழும் அம்மாக்கள், பாட்டிமார்கள் , மாதர்கள் ஒன்றிணைத்து அன்னையர் தினத்தை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடியதாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 அம்மாக்கள் கலந்து கொண்டதாகவும், அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுடன் கைலி உள்ளிட்ட அன்பளிப்புகளும் வழங்கப்பட்டதாக கூறினார். தொடர்ந்து அனைவருக்கும் சிறப்பு விருந்தும் பரிமாறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.மேலும், இந்த ஆண்டில் மலேசிய இந்து சங்கம் ஈப்போ வட்டார பேரவை  பல்வேறு சமூக , ஆன்மிக சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வகையில், அன்னபூர்ணா சக்கரம் திட்டம், உரிமை கோரப்படாத உடல்களின் இறுதி சடங்கு சேவை, மாணவர் மேம்பாட்டு நடவடிக்கைகள் ,ஆலய நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல சமூக நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அன்னையருக்கு மரியாதை செலுத்தும் அர்த்தமுள்ள முயற்சியாகவும் அமைந்தது என்பது குறிப்பிடதக்கது.
(எஸ்.லிங்கேஸ்வரன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here