முதல்-அமைச்சர் விஜய்யுடன் இந்திய தொழிற் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் சந்திப்பு

சென்னை, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை இன்று தலைமைச் செயலகத்தில், இந்திய தொழிற் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் பி.ரவிச்சந்திரன், தமிழ்நாடு தலைவர் சி.தேவராஜன், துணைத் தலைவர் ஜெ.முருகவேல், தென் மண்டல முன்னாள் தலைவர் எம்.பொன்னுசாமி, தமிழ்நாடு முன்னாள் தலைவர் சங்கர் வானவராயர், தமிழ்நாடு இயக்குநர் & தலைவர் பி.ஜெய்கிருஷ்ணன் & நிர்வாகிகள் சந்தித்தனர்.

அப்போது, தொழிற்துறை வளர்ச்சி, முதலீட்டு ஊக்குவிப்பு (ம) கொள்கை ரீதியிலான பங்களிப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு அரசுடன் இந்தியத் தொழிற் கூட்டமைப்பு கொண்டுள்ள நீண்டகாலக் கூட்டாண்மை குறித்தும், தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகள் மற்றும் மாநிலத்தின் நிலையான பொருளாதார மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிப்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here