ஓ.டி.டி.யில் வெளியாகும் ‘கர’ திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்? …

சென்னை, ‘போர் தொழில்’ படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் 30ந் தேதி வெளியான படம் ‘கர’. இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் 1990-களில் ராமநாதபுரத்தில் நடந்த வங்கிக் கொள்ளை பற்றிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. கிராமத்து கதைக்களத்தில் ஆக்சன் பாணியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்த நிலையில், கர படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படம் வருகிற 28-ந்தேதி முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here